இலங்கையின் கிரிக்கட் நட்சத்திரம்
சனத் ஜெயசூரிய இப்போது ஒரு செலிப்ரிட்டி டான்ஸ் ஷோ கண்டெஸ்டன்ட்! நெட்
இல் ப்ராக்டிஸ் பண்ணிய சனத், இனிமேல் ஸ்டேஜ் இல் ப்ராக்டிஸ் பண்ண இருப்பது
சோனி டிவி இல் ஒளிபரப்பாகும் "ஜலக் டிக்லா ஜா" ரியாலிட்டி டான்ஸ்
ஷோவுக்காக! மானாட மயிலாட டைப் இந்த ஷோவின் ஸ்பெஷாலிட்டி, இதில்
போட்டியாளர்கள் அனைவருமே பிரபலங்கள் என்பது தான். மோனிகா பேடியில் இருந்து
கால்பந்து பிரபலம் பெய்சுங் பூட்டியா வரை இதில் கலந்து கொண்டு துவம்சம்
செய்த இந்த ஸ்டேஜில் சீசன் 5 இல் ஆடுவதற்காக சனத்திற்கு பெரிய தொகை
கைமாறியிருக்கிறது என்கிறார்கள்.
![]() |
புதிய ஜல்சா அவதாரம்:ஹி ஹி.. |
சனத்
டான்ஸ் ஷோவில் பங்குபெறப்போகும் விடயம் செய்தியாக வெளியாகியதுமே இணையத்
தளங்களில் ரசிகர்கள்(!) கொந்தளிக்கத் தொடக்கி விட்டார்கள். டெய்லி மிரர்
பத்திரிகையில் அவரது முன்னாள் ரசிகர்கள் மற்றும் இந்நாள் எனிமிகள் கூடிக்
கும்மியடித்திருக்கும் கமென்ட்டுகளே அதற்கு சாட்சி.
இதில்
பல கமெண்ட்டுகள் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கின்றன. சனத் எம்.பி.ஆக
இருந்து கொண்டு டான்ஸ் ஆடுவது, அதுவும் இந்தியன் சானலுக்காக ஆடுவது
ரசிக்கக் கண்மணிகளுக்கு பிடிக்கவில்லை போலும். தாளித்து
எடுத்திருக்கிறார்கள். மக்களின் அபிமானத்தை இழந்து விட்டார்,
ஹீரோவிலிருந்து ஜீரோவுக்கு சென்று விட்டார், இலங்கை எம்.பி.யாக
இருந்துகொண்டு இந்தியாவின் டியூனுக்கு ஆட்டம் போடுகிறார், பணத்துக்காக ****
கூடப் பண்ணுவார், விளையாட்டு வீரரில் இருந்து வர்ணனையாளர்,
அரசியல்வாதியில் இருந்து இப்போது டான்சர், இனிமேல் நீலப்படங்களில் நடிக்கப்
போகிறாரா என்றெல்லாம் ஈவிரக்கமில்லாமல் கமெண்ட்டுகளை
அள்ளிவிட்டிருக்கிறார்கள். நடனமாடும் கோமாளி, விசர், என்றெல்லாம்
அடைமொழிகள் வேறு! எம்.பி யாக இருப்பவருக்கு டான்ஸ் ஆடுவதற்கு எவ்வாறு
நேரம் இருக்க முடியும், ஏற்கனவே அவர் ஒரு நல்ல டான்சர், ஏனெனில் மஹிந்தவின்
தாளத்துக்கு தான் அவர் ஏற்கனவே ஆடிக்கொண்டிருக்கிறாரே! என்று ஒரு கமென்ட்.
சச்சினும் லாராவும் கூட இதே போல செய்வார்களா என்று ஒரு அன்பர்(!)
கேட்டிருந்தார். ( கொஞ்சம் பொறுங்க தலைவா..சச்சின் இப்ப தானே எம்.பி.யாகி
இருக்கிறார்..சீசன் 6 வரட்டும் பிறகு சொல்லுவம்! )
![]() |
ஆட்டத் தொடர் நாயகன்-1996 உலகக் கோப்பை |
பிறகு
அவரது டான்ஸ் ஐ வேறு விமர்சித்து கமெண்ட்டுகள். இடுப்பை ஆட்டுகிறார்,
பொம்மலாட்டம் போல இருக்கிறது,தாத்தா போல இருக்கிறார் என்று திட்டித்
தீர்த்துவிட்டார்கள். இவருக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு நன்றி(!) வேறு
கூறியிருக்கிறார்கள். அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி இவருக்கு
சம்பளம் கொடுத்து எம்.பி.யாக வைத்திருக்கிறது, பேசாமல் மாத்தறையில் குப்பை
அள்ளப் போகலாம் என்று கண்மணிகள் குமுறியிருக்கிறார்கள். இதன்
உச்சக்கட்டமாக சனத் ஐ மதம் மாற்ற வேண்டும் என்றெல்லாம் கூட குரல்
கொடுக்கிற அளவுக்கு விவாதம் விபரீதமாக போயிருக்கிறது! சனத்துக்கு ஆதரவாக
வந்த கொஞ்ச நஞ்சக் கருத்துக்களுக்கும் மைனஸ் ஓட்டு வேறு! ரிட்டையர் ஆகி
ஒழுங்காக இருந்து தொலைக்காமல் குன்சாக எதை எதையோ செய்து பார்க்கிறார் என்று
பொருமித் தள்ளுகிறார்கள்.
அன்பான கணவன், அப்பா |
சனத்
ஆடுவது ஏனோ அவரது ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. சனத் பட்டணத்துப்
பின்னணியிலிருந்து வந்தவரல்ல. அவருடைய ஆதரவாளர்கள் சொல்வது போல, சிட்டி
இலிருந்து வந்த , உயர் குடும்பப் பின்னணியில் வேறு சில வீரர்கள் இந்திய
நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசடர்களாக இருக்கும் போது சும்மா
இருப்பவர்கள் இப்போது சனத் டான்ஸ் ஷோவில் கலந்து கொள்ளும்போது துள்ளிக்
குதிப்பதற்கு காரணம், சரத் மற்ற வீரர்கள் போல ஹீரோ இமேஜைக் காப்பாற்ற
முயலாமல் லுங்கியுடன் கடற்கரைகளில் நடக்கும் விழாக்களில் கலந்து கொண்டு
சிம்பிளாக இருப்பது தான் காரணமோ தெரியவில்லை.
![]() |
சின்சியர் எம்.பி.-அருகில் நாமல் ராஜபக்ஷே! |
அப்புறம்
ஹைலைட்டாக, இந்த சீசனில் நடுவர்களாக வந்து சனத்தின் நடனத்தைக் கிழி கிழி
கிழி....என்று கிழிக்கப் போகிறவர்கள் பாலிவுட் இன் முன்னாள் கனவுக்கன்னி
மாதுரி தீட்சித், பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் கரண் ஜோஹர் மற்றும் பிரபல
கொரியோக்ராபரும் இயக்குனருமான ரெமோ டி சூசா. ஆமா..சனத் எலிமினேட்டட்
என்றால் ஒரு விரலைத் தூக்கிக் காண்பிப்பார்களோ? (#டவுட்டு) சனத்துக்கு
ஜோடியாக ஆடப்போகிறவர் இன்னும் முடிவாகவில்லையாம். எனக்கென்னவோ சனத் ஆடும்
ஒரு சில நிமிட ப்ரோமோ வீடியோவில் முன்னாள் காப்டன் ஆடுவதைப் பார்த்தால்
இந்நாள் காப்டன் ஆடுவது தான் நினைவுக்கு வருகிறது(ஆ..ஆங்..)பயபுள்ளைங்க
வீடியோ பார்த்தத கொலைவெறியில் தான் கமென்ட் தட்டி விட்டிருக்கிறார்கள் போல
தெரிகிறது.
![]() |
இந்த ஸ்டெப்பையும் அங்க போட விடுவாங்களோ?! |
எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் சனத் இந்த ஷோவில் பங்கேற்றால் கொஞ்சம் பொழுது போகும். சிலர் கூறுவது போல, அவர் லஞ்சம் வாங்கினாரா கொள்ளை அடித்தாரா இல்லை நிலவள கங்கையில் குளிக்கும் பெண்களின் கையை பிடித்து இழுத்தாரா? டான்ஸ் ஷோவில் ஆடுறது ஒரு குத்தமாய்யா? அப்புறம் அஜய் ஜடேஜா ஆடியிருக்காக....மொஹிந்தர் அமர்நாத் ஆடியிருக்காக..மற்றும் நம்ம செலிப்ரிட்டிங்க எல்லாம் ஆடியிருக்காக....மற்ற எம்.பி.க்கள் அட்டூழியம் பண்ணும்போதெல்லாம் வெறுமனே இருந்துவிட்டு இப்போது இதற்க்கு தாம் தூம் என்று குதிப்பது இதெல்லாம் கரெக்டா சுடுவீங்க வீரப்பன மட்டும் விட்டுடுவீங்க என்கிற விவேக்கின் டையலாக் தான் மாடுலேஷனுடன் ஞாபகம் வருகிறது.
இன்னொரு
பக்கம் சனத் தனது இந்த புதிய அவதாரத்தைப் பற்றி மிகவும் ஆர்வமாக
இருக்கிறாராம். ரெகுலராக செட்டில் ரிகர்சல் செய்து வருகிறாராம். தனக்கு
மிகவும் பிடித்த நடிகர் ரஜினிகாந்த் என்று சொல்லியிருக்கும் சனத்,
ரஜினியின் நடனத்தின் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு, அதே பாணியில் தனது நடனத்தை
கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறாராம்!
![]() |
நீங்க நல்லா தேத்துங்க உடம்ப... |
பொழுது போகாமல் வெட்டியாக இருப்பவர்கள் கீழே உள்ள லிங்க் இற்கு போய் கமெண்ட்டுகளை வாசிக்கலாம். கொஞ்சம் பொழுது போகும்.
உங்கள் பதிவைப் பற்றி இன்றைய வலைசரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருப்பின் வருகை தரவும்
http://blogintamil.blogspot.in/
நல்ல பதிவு !
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !
நன்றி நண்பரே..நிச்சயம் அதை செயற்படுத்துகிறேன்