மோனிக்கா செலஸ் க்கும் மோனிக்கா லெவின்ஸ்கிக்கும் என்ன வித்தியாசம்?!? கொஞ்சம் பழைய ஜோக் இது. தெரிந்தவர்கள் சிரிக்கலாம் தெரியாதவர்கள் மூளையைக் கொஞ்சம் கசக்கிக் கொண்டிருங்கள் இறுதியில் பார்ப்போம். அதற்கு முதலில் (f )பாஷன் சொர்க்கபுரி பாரிஸில் பிரெஞ்சு ஓபன் நடந்து முடிந்திருக்கிறது. அதிலிருந்து சில ஷொட்கள்.
மீண்டும் மரியா!
மரியாவுக்கு இந்த பிரெஞ்சு ஓபன் ரொம்ப ஸ்பெஷல். அம்மாவும் தோழியும் போல் விளையாட்டும் ஆபரேஷனும் உடன் பிறவாத சகோதரிகள் போல. 2008 இல் தோள்பட்டையில் செய்து கொண்ட சர்ஜரிக்குப் பிறகு எந்த கிராண்ட் ஸ்லாமையும் வெல்லாத மரியாவுக்கு இந்த டைட்டில் ஒரு செகண்ட் இன்னிங்க்ஸின் ஆரம்பம்! இந்த பிரெஞ்சு ஓபனை வென்றதோடு இன்னொரு சாதனையும் செய்திருக்கிறார் ஷரபோவா.கேரியர் கிராண்ட் ஸ்லாம் எனப்படும் நான்கு முக்கிய கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றவர்கள் பட்டியலில் பத்தாவதாக இடம்பிடித்திருக்கிறார்!
ராஜாவின் பார்வை (எ)ரானியின் பக்கம்!
சாரா எரானி (செல்லமாக ஸரீட்டா!)கலக்கல் அறிமுகம்.டபிள்ஸில் கிராண்ட் ஸ்லாம் வென்றதன் மூலம் முதலாவது கிராண்ட் சலாம் வென்றிருக்கிறார் இந்த வெனிஸ் தேசத்து தேவதை. சிங்கிள்ஸ் இலும் ஷரபோவாவுடன் பைனல்ஸ் இல் ஜோடி போட்டது ஒரு அதிரடி ஆரம்பம். பட்டம் வென்றிருந்தால் ஒரு போட்டித்தொடரில் இரண்டு கிராண்ட் ஸ்லாம்களை வென்று சாதனை படைத்திருப்பார்!
சானியா-எங்கிருந்தாலும் வா....ழ்க !
பூபதி - சானியா ஜோடி , அபிஷேக்-ஐஸை விட ஹிட்! இம்முறை பிரெஞ்சு ஓபன் மிக்ஸ்ட் டபிள்ஸ் ஐ கைப்பற்றிய இந்த ஜோடிக்கு இது இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் ! ( 2009 இல் அவுஸ்திரேலியன் ஓபன் கைவசம்). முன்பு சானியா லீக் போட்டிகளில் ஜெயிக்கும்போதே தூக்கிவைத்துக் கொண்டாடும் மீடியாக்கள் இம்முறை கிராண்ட் ஸ்லாம் வென்றும் பெரிதாகக் கண்டுகொள்ளாதது ஏனோ? (அப்புறம் பூபதிக்கு இது எட்டாவது..அதாவது எட்டாவது கிராண்ட் ஸ்லாம்! ஸ்வேதாவுடன் டிவோர்ஸ், லாராவுடன் திருமணம் என்பதைத் தாண்டி, மகேஷ் இப்போது சாய்ரா என்கிற குட்டி தேவதைக்கு அப்பா !)
கடுப்பேற்றிய ஆண்கள்!
அரையிறுதியில் வென்று பைனல்ஸில் பரம வைரி நடாலுடன் மோதுவார் என்று பரபரப்புடன் எதிர்பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிப் போட்டுவிட்டு செமி பைனல்ஸில் ஜோகோவிச்சிடம் அநியாயத்துக்கு தோற்றார் பெடரர்.
![]() |
ரf பா- தி சாம்பியன் -என்னா லுக்கு...அதான் கேம் முடிஞ்சிருச்சில்ல..? |
பைனல்ஸில் ஜெயித்து கேரியர் கிராண்ட் சலாம் கைப்பற்றும் ஆவலுடன் ஜோகோவிச்சும் ஏழாவது முறை பிரெஞ்சு ஓபன் வென்று சாதனை படைக்கும் வெறியுடன் நடாலும் இறுதிப்போட்டியில் களமிறங்கி புழுதிபறக்க மோதிக்கொண்டிருக்கும் போது பார்த்துத் தானா அநியாயத்துக்கு மழை வந்து தொலைக்க வேண்டும்? இரண்டு நாட்களாக நடந்த பைனல்ஸில் கடைசியில் வழக்கம் போல ரபா வென்று சாதனை படைத்தார். (க்ளே கோர்ட்டில் மன்னன் அல்லவா?) விறுவிறுப்பான ஐந்து செட் போட்டி ஒன்றை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஜவ்வு மாதிரி இரண்டு நாட்கள் நீண்ட பைனல்ஸ் ஏமாற்றமே!
பிறகு மேலே கேட்ட ஜோக்கிற்கு விடை..மோனிகா செலஸ் டென்னிஸ் ப்ளேயர்..மோனிகா லெவின்ஸ்கி? ஹி ஹி...(எப்போதோ குமுதத்தில் படித்தது என்று ஞாபகம். அதிலும் பதில் போட்டிருக்கவில்லை! )
எக்ஸ்ட்ரா : நேற்று பைனல்ஸ் முடிந்த பிறகு எப்.எம்.இல் ரிசல்ட் சொல்லிக்கொண்டிருந்த போது , (கிரிக்கட்டுக்கு இடையில் தான்) பாவம் நோவாக்! இவர்கள் பெயரை உச்சரித்த விதத்தைக் கேட்டிருந்தால் நிச்சயம் டென்னிஸை விட்டே ஒதுங்கியிருப்பார். பிறகு நடால் எட்டாவது முறையாக பிரெஞ்சு ஓபனை கைப்பற்றினார் என்று வேறு கூசாமல் அறிவித்தார்கள்.
even though both are good with "balls", only seles is a tennis player and lewinsky is **nis player.
hope that clears your doubt.