இலங்கை அமைச்சர்கள் கலக்கும் காமடி டைம்!

இலங்கைப் பாராளுமன்றம் பெருமையுடன் வழங்கும் சித்திரைப் புதுவருட சிறப்பு நிகழ்ச்சிகள்! காணத்தவறாதீர்..! வரும் நந்தன வருடப் பிறப்பன்று சிலோன் டி.வி. இல் ஒளிபரப்பாகவுள்ள இலங்கை அமைச்சர்கள் கலந்து சிறப்பிக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளின் முன்னோட்டமே இது. ( எச்சரிக்கை: மன நோய் அற்றவர்கள், இதயம் பலமுடன் இருப்பவர்கள் எவரும் இதை பார்க்க வேண்டாம். சானலை மாற்றி சன். டி.வி.இல் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம்  பார்க்கவும்-நிர்வாகம் )நள்ளிரவு 12 .௦௦- அதிகாலை 04 .௦௦ மணி 

பக்திப் பூமாலை  

பிரித் ஓதலுடன்  தொடங்கும் இந்நிகழ்ச்சியில் பிரதமரும் சமய விவகார அமைச்சருமாகிய டி.எம்.ஜெயரட்ன, கிளிநொச்சிக்கு  புத்தர் எப்போது விஜயம் செய்தார் என்பது பற்றியும் A9 வீதியெங்கும் உள்ள ஆல மரங்களில் புத்தர் எப்போது இளைப்பாறினார் என்பது பற்றியும் பிரசங்கம் நிகழ்த்துவார். சிவன் கோயில்களில் இரவோடிரவாக புத்தர் சிலைகள் வந்து உட்கார்ந்திருக்கும் கலியுக அதிசயம் பற்றிய விளக்கவுரையும் இடம்பெறும். இதன் போது புத்த விகாரையை இடித்து அந்த இடத்தில் உருத்திரபுரம் சிவநகர் சிவன் கோயில் கட்டப்பட்டது பற்றிய ஆவணப்படமும் காண்பிக்கப்படும். அதிகாலை 04.00 -08 .௦௦ மணி  

பாவிகள் ஆயிரம் 

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கும் சுய முன்னேற்ற நிகழ்ச்சி.  இதில் பாரம்பரிய கைத்தொழில்களான ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, வல்லுறவு போன்றவற்றில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்பதை அமைச்சர் அவர்கள் விளக்குவர். மேலும் சிறுதொழில் முன்னேற்றத்தின் போது பத்திரிக்கை அலுவலகங்களினுள் புகுந்து அடித்துடைப்பது, மணல் கொள்ளையில் ஈடுபட்டு தொழிலை விஸ்தரிப்பது போன்ற அறிவுரைகளும் நிகழ்ச்சியில் இடம்பெறும். காலை 08 .௦௦- 10 .௦௦ மணி  

உது எது அது 

அட்டகாசமான காமடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உங்கள் அபிமான காமடியன் தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க. " ஸ்ரீலங்காவில் ஒருவருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.2500  போதும்" , " மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ.7500  இற்குள் பட்ஜெட் போட முடியும்" போன்று இவர் அடிக்கும்  டைமிங் ஜோக்குகளால் ப்ரோக்ராம் டி.ஆர்.பி. எகிறப்போவது உறுதி.


காலை 10 .00  - நண்பகல் 12 .00 மணி 

ஹோம் டெரர் ஹோம் 

ஜனாதிபதி மற்றும் பல முக்கிய துறைகளின் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ, தனது குடும்பத்தோடு பங்குபெறும் நிகழ்ச்சி.  யார் வென்றாலும் பரிசு அந்த குடும்பத்துக்குள்ளேயே போய் சேரும் என்பது தான் இதன் சிறப்பு. பாது காப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, ஷிராந்தி ராஜபக்ஷ, யோஷித ராஜபக்ஷ, ரோஹித ராஜபக்ஷ ஆகியோர் பங்கு பெறுவார்கள். இதன்போது க.போ.தா. பாஸ் பண்ணாமல் ஜனாதிபதியாவது, லோ கொலிஜ் இல் ஏ.சி. அறைக்குள் இருந்து பரீட்சை எழுதுவது, 8  பாடங்களில் சராசரி 98  புள்ளிகள் வாங்குவது போன்ற கடினாமான போட்டிகள் இடம்பெறும்.
நண்பகல் 12 .00  - 2 .00  மணி  

கொல்வதெல்லாம் உண்மை  

கேடி நம்பர் 1 சீசன் டைட்டில் வின்னர்  பொதுசனத் தொடர்பாடல் துறை அமைச்சர் மேர்வின்  சில்வா  தொகுப்பாளர் நவி பிள்ளை அம்மாவிடம் மனம் திறக்கிறார். சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்தது, சிரச சானலுக்குள் அடியாட்களுடன் புகுந்து  ஊழியர்களைத் தாக்கியது, ஜெனிவா சென்று உண்மையை சொன்ன மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலார்களின் கை கால்களை உடைப்பேன் என்று அனல் கக்கியது என்று தனது சாதனைகள் பற்றி மனம் திறக்கிறார். 


நண்பகல் 2 .௦௦ - மாலை 04.௦௦ 

சிறப்பு நீயா? பேயா ? 

"அமைச்சர் பதவியைத் துஷ்பிரயோகம் செய்பவரா நீங்கள்? நீயா பேயா? வில் கலந்து  கொள்ள..."என்று ஸ்க்ரீன் இல் ஓடிய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்ட தொழில்துறை  மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு பங்குபற்றுனராக வருவதை விட கெஸ்ட்டாக வரும் அளவுக்கு தகுதி இருப்பதாக சானல் கருதியதால், அவர் நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்கின்றார். இதன் போது  பதவின் செல்வாக்கைப் பயன் படுத்தி எவ்வளவு காணிகளை அபகரிக்கக முடியுமோ அபகரிப்பது, மனித உரிமை அலுவலகங்களில் வேலை செய்பவர்களை கொலை செய்வது, பின்பு அந்த கொலை வழக்கைத் தனது செல்வாக்கால தாமதப் படுத்துவது எல்லாம் சரியே என்று கூறி தனது கருத்தை முன்வைக்கிறார். மாலை 04 .௦௦- 07.௦௦ மணி

சிறப்புத் திரைப்படம்- " ஜெனிவாவில் சொதப்புவது எப்படி? "

வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஹீரோவாக நடித்து வெளிவந்து சில மாதங்களேயான புத்தம் புதுத் திரைப்படம். வில்லன் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையைத் தோற்கடிக்க ஹீரோ எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் அதில் அவர் தோல்வியடைந்து கதறுவதும் தான் படம் முழுக்க வருகிறது. இதில் ஹீரோ நாடு நாடாக அலைந்து சிறப்பு மீட்டிங் வைத்து காலில் விழுந்து கதறும் எமோஷனல் காட்சிகள் பிரமாதமாகப் படமாக்கப் பட்டிருக்கின்றன. ஹீரோவின் நண்பனாக நடித்து அவரைக் கைவிடும் நண்பனாக எஸ் .எம்.கிருஷ்ணா நடித்திருக்கிறார். இறுதியில் நண்பனின் தந்தை மன்மோகன்சிங் என்பவர் கடிதம் எழுதி மன்னிப்புக் கேட்டு கண் கலங்கும் இடம் டச்சிங். சுவிட்சர்லாந்தில்  சில  பாடல் காட்சிகள் படமாக்கப் பட்டிருக்கின்றன. இறுதியில் ஹீரோ " அந்த 4  பேருக்கு நன்றி..." என்று சோகமாகப் பாடிக்கொண்டு நாடு திரும்பி "கற்றதும் பெற்றதும்" என்று நாவல் எழுதுவதோடு படம் முடிகிறது. 


மாலை 07 .௦௦ - இரவு 09 .00 மணி 

 படுக்கலாம் வாங்க !

கால்நடை, கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்  கற்பழிக்கும்...சாரி தொகுத்தளிக்கும் மிட் நைட் மசாலா டைப் ப்ரோக்ராம் இது. வயது வந்தவர்களுக்கு மட்டுமே. வெளி நாடுகளில் ஹோட்டல்களில் பெண்களோடு சேட்டை விடுவது, கையைப் பிடித்து இழுத்து தகாத முறையில் நடப்பது, அவர்களோடு சில்மிஷம் செய்து கில்மா வேலைகள் பார்ப்பது, பாரில் விடிய விடிய ஊத்திக் கொண்டு ஹோட்டல் ஊழியர்களோடு தகராறு பண்ணுவது மாதிரியான சகல லீலைகளும் கற்று தரப்படும். போனசாக ' பொண்ணைக் கையப் பிடிச்சு இழுத்தியா?' மாதிரியான காமடி கிளிப்பிங்க்சும் இந்த நிகழ்ச்சியில் உண்டு. இரவு 09 .௦௦- 11 .௦௦ மணி 

நீங்களும் கொல்லலாம் ஒரு கோடி 

நான்கு துறைகளின் அமைச்சரும் நாட்டின் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொகுத்து வழங்கும்  மெகா ஹிட் அடிக்கப்போகும் நிகழ்ச்சி இது. கேட்கப்பட இருக்கும் கேள்விகளுக்கான சில உதாரணம் :

1 )  இறுதி யுத்தத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்? 
a) 4 
b) 6 
c)10  
d) யாருமே கொல்லப்படவில்லை

2 ) இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளி வாய்க்கால் பகுதியில் எத்தனை விதமான ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டன?

a) இறுதியில் யுத்தமே நடைபெறவில்லை
b) யுத்தத்தில் ஆயுதங்களே பாவிக்கப்படவில்லை
c) பதில் சொன்னால் நான் நாட்டைக் காட்டிக் கொடுத்த துரோகி
d) முள்ளிவாய்க்கால் தூத்துக்குடி  பக்கம், ஈரோடு பக்கம்னா இருக்கு?  
  
இந்த அட்டு ஜோக்குக்கெல்லாம் நான்  சிரிக்கணுமா? ஆள விடுங்கப்பா..!இரவு 11 .௦௦-நள்ளிரவு 12 .௦௦ மணி 

ஒரு வார்த்தை ஒரு அச்சம் 

இறுதியில் நாட்டு மக்கள் போன் போட்டு கெட்ட கெட்ட வார்த்தைகளில் சானலைத் திட்டும்  நிகழ்ச்சி இடம்பெறும். 

மிஸ் பண்ணிடாதீங்க..!

(யாவும்  கற்பனை! )

2 Responses
  1. Anonymous Says:

    எப்படியோ சார் இந்த புலிகளின் கொடுமைகளில் இருந்து தமிழாகள் தப்பி இந்தளவிலாவது இருக்கிறர்களே என்று தாய் தமிழகத்தை சோந்த நாம்திருப்தி பட வேண்டும்.


  2. NICE POST

    த/பெ-(தந்தை பெயர்)
    http://vazhithunai.blogspot.in/2012/04/blog-post.html


Related Posts Plugin for WordPress, Blogger...