'பிரம்மாண்ட' ஹீரோவின் மரணத்தில் மர்மம்?

சில ஹீரோக்கள் செம ஹிட்டாகி  பாகம் ஒன்று, ரெண்டு, மூணு எல்லாம் வந்து சக்சஸ்புல்லா ஓடின சூப்பர்ஹிட் படங்கள்ல நடிச்சிருப்பாங்க. ஆனா படம் பார்த்தப்புறம் வெளில வந்ததுக்கு பிறகு அந்த ஹீரோக்களுக்கு என்ன ஆச்சு, அவங்க இப்பவும் உயிரோட இருக்காங்களா, என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க என்கிறதா யாரும் லைட்ஸ் ஆன் சுனிலுக்கு எழுதிக் கேக்கிறதில்ல. அப்புறம் சில ஹீரோக்கள் டிஸ்கவரி சானல்கள்ளேயும் ஹீரோவா பண்ணியிருக்காங்க.( எஸ்! இவங்க இமேஜ் பார்கிறதில்ல! ) அப்படி பட்ட சில ஹீரோக்களின் மறுபக்கங்கள இப்போ பார்ப்போம்.'பிரம்மாண்ட ஹீரோ' மமத் (ஹிஹி....)

ஐஸ் ஏஜ் படத்தில ஹீரோவா நடிச்ச இந்த வூலி மமத் 10000  ஆண்டுகளுக்கு முன்பு வரையில பூமியில வாழ்ந்தாங்க. அப்புறமா மனுஷங்க இதோட எலும்புக்கும் கம்பளித் தோலுக்குமா இதை வேட்டையாடிறது ஒரு கலாச்சாரமாவே இருந்துச்சு. இப்பிடியே ஒரேயடியா  வேட்டையாடினதாலையும், இதோடவாழ்விடங்கள் குறைஞ்சு  போனதாலையும் பூமியோட தட்பவெட்ப நிலையில ஏற்பட்ட மாற்றங்களாலையும்  மமத் இனம் இந்த பூமி விட்டே மறைஞ்சு போச்சு. மனுஷன் வேட்டையாடி வேட்டையாடியே அழிச்ச இனங்களுக்குள்ள முக்கியமானது இந்த மமத். இதை இப்ப க்ளோனிங் டெக்னாலஜி மூலமா மீள உருவாக்கலாமா என்று விஞ்ஞானிகள் முயற்சி எடுத்துக்கிட்டிருக்காங்க! ஐஸ் ஏஜ் படத்தில நடிச்ச புலி கூட இப்ப பூமியில இல்லாம அழிஞ்சு போன இனம் தான்! மாமாத்தோட மரணத்துக்கு சரியான காரணம் என்ன என்கிறது இன்னமும் சரிவர தெரியாத மர்மமாவே இருக்கு.
மனுசங்கிறவன் ஒரு தீராத பசி கொண்ட விலங்கு அப்படின்னு யாரோ சொல்லியிருக்காங்க. அவன் தன்னோட பசிக்காக என்ன வேணும்னாலும் செய்யத் தயாராவே இருப்பான். அவனோட தேவைகளை அடையணும்னா அதுக்காக நம்பியார், பி.எஸ்.வீரப்பா ரேஞ்சுக்கு எதையும் செய்யத் தயங்க  மாட்டான். வெளியில டக்சீடோ  போட்டிருந்தா கூட உள்ளுக்கு அவன் இன்னும் வெறி கொண்ட மிருகம். பூமியை பற்றி கவலைப்படாம அவன் செஞ்ச வேலைகளால இன்னிக்கு மமத் மாதிரி இன்னும் நிறைய ஹீரோக்கள் ஆபத்தோட விளிம்புகள்ள இருக்காங்க. இவங்க கூட மமத் இல்லாம போன மாதிரி, மனுஷன் என்கிற வில்லனால இந்த பூமியில இருந்தே அழித்து ஒழிக்கப்படுறதுக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு. அப்பிடி ஆபத்து வளையத்துக்குள்ள நின்னுகிட்டிருக்கிற சில ஹீரோக்களோட எக்ஸ்க்ளூசிவ் பேட்டி இதோ!

மலை கொரில்லா

கிங் காங்ல ஹீரோவா பண்ணினது நம்ம சொந்தக்கார தம்பி தான்..தூள் கிளப்பிட்டான்ல? இப்போ பாருங்க இவனும் நடிப்பேன்னு  அடம் பிடிக்கிறான்..முதல்ல ஹீரோ..பிறகு சி.எம்...அப்புறம் பி.எம். தான்! 


 இராட்சத பாண்டா

காலங்காத்தாலேயே உனக்கு ரொமண்டிக் மூடு வந்துடுது..பல்லு விளக்கினதுக்கு அப்புறம் லிப் டூ லிப் கிஸ் வைச்சிக்கலாம் ஓகேயா? 


பனிச் சிறுத்தை


ஆமா.. ' அவரு' இருக்காரா இல்லையா? எங்களை பொடாவில புடிச்சு உள்ள போடா முடியாதில்ல? அப்புறம்  டாப்சி மாதிரி எங்களையும் யாரோ வெள்ளாவி வச்சு வெளுத்திட்டாங்களோ?!?சுமாத்ரா காண்டாமிருகம் 

சனியன் பிடிச்சவனே.. சாப்பிடும் போது க்ளோஸ் அப் ஷாட் வைக்காதேன்னா   கேட்டா தானே? யாரு கிட்டே அசிஸ்டண்டா இருக்கிறே நீ? நீரவ் ஷா சொல்லி கொடுக்கலையா? 


ஸ்டெல்லர் கடல் சிங்கம்


' கடல் மேல் பிறக்க வைத்தான்..எங்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்..' அப்படின்னு புரட்சித் தலைவர் கரெக்டா தான் பாடியிருக்காரு.. வைச்சிருக்கிற பேரைப் பாரு..சிங்கம்..தங்கம்ன்னுட்டு..பாந்தீரா புலி

நானும் காப்டன் மாதிரி நாக்கை மடிக்க எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்...முடிய மாட்டேங்குதே..


நீலத் திமிங்கிலம் 
அடேய் ...எகிறி  எகிறி அடிக்க நான் என்ன பீட்டர் ஹெயனாடா? லெக் பைட் எல்லாம் குடுத்தபடி போஸ் குடுக்க என்னால முடியாதுடா..விட்ருங்கடா
நட்சத்திர ஆமை 

ஆமைக் குஞ்சை அவிச்சு வைச்சிருக்கோம்னு படத்தில டயலாக்காடா வைக்கிறீங்க..இருங்க வர்ரேன்...


போலார் கரடி 


டேய்..நீ ஒருத்தனுக்கு பிறந்தவனா இருந்தா வெளில வாடா பாக்கலாம்..பி கேர்புல்..பேச்சு பேச்சா இருக்கணும்..


மேலே சொன்ன ஹீரோக்கள் எல்லாம் ரொம்ப ஆபத்தில இருக்கிறவங்க. பூமியில தங்களோட  இறுதிக் காலங்கள்ல இருக்காங்கன்னு சொல்லலாம். இவங்களோட வாழ்க்கைக்காலத்தை  மாதிரி சீரியல் மாதிரி நீடிக்கிறதும் சினிமாப் படம் மாதிரி குறுகலா முடிக்கிறதும் மனுஷங்களோட கையில தான் இருக்கு. அவன் தான் திருந்தணும்! இல்லேன்னா இந்த ஹீரோக்களை வெறும் விக்கிபீடியால மட்டும் தான் பார்க்க முடியும்! 

அப்புறம் இன்னிக்கு  புவி நாள்  (22 .04 .2012 )! 
5 Responses
 1. Anonymous Says:

  very glad, keep it up friend.


 2. நண்பரே நலமா

  ///இது உறங்கா மனிதர்கள் உலவும் கூடாரம்...சொல்லாமல் விட்ட கதைகள் இங்கு சொல்லப்படும்.///

  இப்படிப்பட்ட வாக்கியத்துக்கு சொந்தகாரர்களில் நானும் ஒருவன்

  புகைப்படங்களுக்கு நீங்க கொடுத்திருக்கிற விளக்கங்கள் என்னை இந்த நடுநிசியில் சிரிக்க மட்டுமல்ல கருத்துரையும் எழுத வைத்து விட்டது.

  ///சனியன் பிடிச்சவனே.. சாப்பிடும் போது க்ளோஸ் அப் ஷாட் வைக்காதேன்னா கேட்டா தானே? யாரு கிட்டே அசிஸ்டண்டா இருக்கிறே நீ? நீரவ் ஷா சொல்லி கொடுக்கலையா?///

  இது

  ///டேய்..நீ ஒருத்தனுக்கு பிறந்தவனா இருந்தா வெளில வாடா பாக்கலாம்..பி கேர்புல்..பேச்சு பேச்சா இருக்கணும்..///

  இது எல்லாம் என்னை சவூதி டைம் 1.45 க்கும் என்னை சிரிக்க வைத்தவை

  வாழ்த்துகள் நண்பரே


 3. அப்புறம் என்னை கவர்ந்த பதிவுக்கு தமிழ்மணத்தில் ஓட்டு போட்டு இருக்கிறேன் சும்மா சொல்லவில்லை கிழே ஆதரம் இருக்கு பார்க்கவும். ஹா ஹா ஹா


  இடுகைத்தலைப்பு:
  \'பிரம்மாண்ட\' ஹீரோவின் மரணத்தில் மர்மம்?

  உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!


 4. நலம் நண்பரே..நாடுவதும் அதுவே..

  நீங்கள் நள்ளிரவில் போட்ட 'பிரம்மாண்டமான' கருத்துரை என்னை பட்டப் பகலில் சிரிக்க வைத்து விட்டது..! வாக்களித்ததை ஆதாரங்களோடு எல்லாம் நிரூபிக்கத் தேவையில்லை..நான் எதையும் நம்பும் ஒரு ஒரு அப்பாவி! நன்றி!


 5. நல்ல ஒரு பதிவு.......:)


Related Posts Plugin for WordPress, Blogger...