நாத்திகனாக இருப்பதன் நன்மைகள்!

நன்மைகள்  

கமல் ஹாசன்:அன்பே சிவம் 

10)மத சின்னங்களை உடம்பு முழுக்க சுமந்து திரிய தேவையில்லை.
09)வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லத் தேவையில்லை.

08)கஷ்டப்பட்டு  மத நூல்களை நெட்டுரு போட்டு நாக்குத் தள்ளத்   தேவையில்லை. பரீட்சையில் விளக்கவுரை எழுதி முழி பிதுங்க வேண்டியிருக்காது.

07)எல்லா நாளும் எல்லா வகை உணவுகளையும் ஒரு கை பார்க்க முடியும். கடவுளையும் வஞ்சிர மீன் வறுவலையும் ஒரே சமயத்தில் நினைக்கத் தேவை இருக்காது.

06)சடங்குகளுக்கு அடிமையாக தேவையில்லை. நினைத்த நேரம் நினைத்த வேலையை நினைத்தது போல செய்ய முடியும். கூடிக் கும்மியடிக்க அவசியமில்லை.

05)நீங்கள் விரும்பிய நபரைத் திருமணம் செய்துகொள்ள  முடியும்.

04)தேவையற்ற நம்பிக்கைகளில் கவனம் கலையாது. லாரிக்கு எலுமிச்சம்பழம் கட்டத் தேவையில்லை.

03)மதத்தை காத்துக்கொள்ள யாரிடமும் சண்டைக்குப் போக  வேண்டியதில்லை.மதம் அழியுதே என்று அழவும் தேவையில்லை.

02)எல்லா மதத்தவர்களையும் ஒரே மாதிரி பார்த்து அன்பு செலுத்த  முடியும். ஆண், பெண், சாதி, குலம், கோத்திரம் பார்க்கத் தேவையில்லை.

01)மதம் பிடித்து அலையும் நோய் தாக்காது. ஹெல்தியாக இருக்க முடியும்.
தீமைகள் 

ழான் போல் சாத்தர்- ஏதிஸ்ட் எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் ( நாத்திக இருத்தல்வாதி!)

05)கடவுளுக்கு வேலையை கொடுத்து விட்டு அக்கடா என்று  உட்கார்ந்திருக்க முடியாது. பிகரைக் கரெக்ட் பண்ண கூட, உழைத்தே ஆக வேண்டும். அதே போல, பிழை விட்ட பின் நைசாக கடவுளைக் குறை சொல்ல முடியாது. முழுக்க முழுக்க தானே பொறுப்பேற்க வேண்டும்.

04)எதற்காகவும்  கடவுளைத் துணைக்குக் கூப்பிட முடியாது. கடவுளின் தோளில் சாய்ந்து அழ முடியாது. தனியே வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

03)செண்டிமெண்ட்கள் வைத்து தைரியத்தை பூஸ்ட் பண்ணிக்கொள்ள முடியாது. தாயத்து எல்லாம் கட்ட முடியாது.

02)கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கவோ, செய்த பிழையை மறைக்க ஐஸ் வைத்து திருப்திப்படவோ முடியாது. 

01)நிறையத் தன்னம்பிக்கை வேண்டும்!

16 Responses
 1. இப்பத்தான் இழந்தவை எத்தனை இறைவா என்று சென்னை பித்தன் பதிவு போட்டார்.இப்ப நீங்களா? எல்லாம் விருமாண்டி படம் செய்யும் வேலை:)

  நாத்திகம் நிறைய தன்னம்பிக்கையை உருவாக்கும்.அனுபவம்.


 2. Anonymous Says:

  நீங்கள் விரும்பிய நபரைத் திருமணம் செய்துகொள்ள முடியும்..////


  அவர் உங்களை போல மத நம்பிக்கையற்றவராக இருந்தால் தான் அதுவும் சாத்தியம்.


 3. கொண்டாட வேண்டிய வார்த்தைகள்... வரிகள்... உண்மைகள்...


 4. நீங்க கலக்குங்க தலைவா


 5. //கடவுளுக்கு வேலையை கொடுத்து விட்டு அக்கடா என்று உட்கார்ந்திருக்க முடியாது. பிகரைக் கரெக்ட் பண்ண கூட, உழைத்தே ஆக வேண்டும்.//

  ரொம்ப கஷ்டமான வேலை 6. நாத்திகனாக இருப்பதன் நன்மைகள் அதிகம். கடவுளும் அவர்கள் பக்கமே. கடவுள் பெயரைச்சொல்லி ஏமாற்றுவதில்லை.


 7. Anonymous Says:

  நல்ல பதிவு. ஆத்திக நண்பர்களை விட, மன சுதந்திரம் உடைய நாத்திகர்கள் நல்லவர்கள். ஆனா , முதிர்ச்சி அற்ற நாத்திகம் வீணானது.


 8. Anonymous Says:

  வணக்கம்

  கூகிள்சிறி திரட்டி இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படுகிறது.உங்களுடைய பதிவுகள் தமிழ்மக்கள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் எவ்வாறு இணைப்பது என்று அறிய கூகிள்சிறிக்கு வாருங்கள்.http://www.googlesri.com/

  யாழ் மஞ்சு


 9. ///அவர் உங்களை போல மத நம்பிக்கையற்றவராக இருந்தால் தான் அதுவும் சாத்தியம்.///

  அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை! அதை என்னால் அடித்து கூற முடியும்! இங்கு, அமெரிக்கவில் இவளை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணலாம்; அவளுக்கு சர்ச்சுக்கு போகணும், இல்லை கோவிலுக்கு போகனும் என்றால் போகலாம். Freedom to practice one's religion. கணவனுக்கு தலையிட உரிமை இல்லை.

  இந்தியாவில் ஒரு வேளை நீங்க சொல்கிராமாதிரி இருக்கலாம். ஏனென்றால், இந்தியாவில் பெண்கள் அடிமைகள். அதானால் ஆண்கள் சொல்கிறபடி ஆடத்தான் ஆடவேண்டும்!


 10. மிக அழுத்தமான நாத்திக வாதங்களை ஆத்திகரும் ரசிக்கும் வகையில் சிரிக்கச் சிரிக்கச் சொல்லிச் சிந்திக்க வைத்த தங்களின் நுண்ணறிவு வியக்கத் தக்கது.
  மனம் திறந்து பாராட்டுகிறேன்
  மிக்க மகிழ்ச்சி. நன்றி..


 11. 08 மதப் புத்தகங்களை நெட்ரு போட்டு இப்படி அசிங்கம் இருக்கு அப்படி அசிங்கம் இருக்குன்னு சொல்றதே, இந்த நாத்திகவாதிகள்தானே ஐயா!

  ஆங்.... அப்படியா இருக்குன்னு அதைப்பார்த்துத்தான் ஆத்திகவாதி தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு.


 12. ஒரு காரியம் நடக்குமா நடக்காதா நம் உள் மனசு என்ன சொல்கிறது போன்ற சஞ்சலங்கள் இருக்காது. எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் வரும்.


 13. /*நிறையத் தன்னம்பிக்கை வேண்டும்!*/ Over all this is the only one main thingggggg :)


 14. ஆன் லைன் டெஸ்ட் எழுத செவ்வாய் கிழமையை தேர்ந்தெடுங்க, ஜெயிக்க வாய்ப்பு அதிகம்.
  ராகுகாலம், எமகண்டம் சூலம் லொட்டு லொசுக்குப் பார்க்காமல் அன்று வீடு வாகனம் ரிஸ்ட்ரேஷன் வைத்துக் கொண்டால், கூட்டமே இருக்காது. இவை எல்லாம் அனுபவ பாடங்கள் :-)
  என்ன ஒன்று, செவ்வாய் கிழமையா? 13ம் தேதியா என்று யாராவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள். காதிலேயே போட்டுக்காதீங்க.


 15. ஹேமா Says:

  நிறையவே நன்மைகள் இருக்குப்போல .....!


Related Posts Plugin for WordPress, Blogger...