ஏழாம் அறிவு பார்த்து விட்டு வெளியே வந்த போது ஒருத்தர் ' ஏழாம் அறிவு- மூன்றாம் அறிவு' என்று சொல்லிக் கொண்டிருந்தார். விமர்சனத்தில் பஞ்ச் வைக்கிறாராமாம்! பஞ்ச் வைக்க இவர் என்ன குமுதமா?! செம கடுப்பு போலும்.
விமர்சனம் எல்லாம் ஏற்கனவே பார்த்தாச்சு. கதை என்ன? அதுவும் தெரிஞ்சிருக்கும். காஞ்சிபுரத்தில இருந்து சீனா போன போதி தர்மன், அங்க இருந்த மக்களை தாக்கிய ஒரு கொடிய நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கிறார். இப்போது சீனா இந்தியாவில் மீண்டும் அதே நோயை பரப்ப முயற்சிக்கிறது. அதை தடுக்கும் வல்லமை போதி தர்மன் வம்சாவழியில் வந்த சூர்யாவிடம் ஒளிந்திருக்கிறது. இதற்காக சூர்யாவைத் தேடிக் கண்டு பிடித்து அவரிடம் இருக்கும் போதி தர்மனின் திறமைகளை வெளிக்கொணர ( தமிழ்! ) முயற்ச்சிக்கிறார் டி.என். ஏ. சமாச்சாரங்களில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவி சுருதி. இந்தியாவில் நோயை பரப்பவும் இந்த ஆராய்ச்சியை தடுப்பதற்காக சுருதியைக் கொல்ல சீனாவில் இருந்து வரும் வில்லன் தான் ஜொனி ட்ரி நுயன் (கலக்கிட்டீங்க !).
போதி தர்மன் என்கிற ஒரு பாத்திரத்தை ஹீரோ ஆக்கியது ஓகே. ஆனால் படம் முழுக்க அவர் என்ன செய்தார், எங்கு வாழ்ந்தார், 1600 வருடங்களுக்கு முதல் சீனா போனார், மருந்து கண்டு பிடித்தார் என்றெல்லாம் திருப்பி திருப்பி ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டுமா? இதென்ன டோக்யூமேன்றியா?! விக்கி பீடியாவில் உள்ள போதி தர்மரின் படத்தை கூடவா அப்படியே உருவ வேண்டும்?! அந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்ய சோம்பல் போல. இதுக்காக இங்க இருந்து பஸ் பிடிச்சு போய் சினிசிட்டி வாசலில இரும்புக் கூண்டுகளுக்கு நடுவில சிங்கங்கள் மாதிரி லைன் இல நின்று மழையில நனைஞ்சு கஷ்டப்பட தேவையே இல்லை. சிம்பிள் ஆக விக்கிபீடியாவில கொஞ்சம் தேடினாலே போதுமே?!
சூர்யா. போதி தர்மனாக வரும்போது மட்டும் அந்த கண்களும் மீசையும் கம்பீரம். மத்தபடி காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல் எல்லாம் அயன், ஆதவன். பெரிதாக வேலையும் இல்லை படத்தில். காதல் காட்சிகளில் கண்களில் ரொமான்ஸ் வழிந்தாலும் ஆழமில்லாத காட்சிகள், ஒட்டாத ஜோடி என்று அதுவும் வீண்.
வெள்ளை வெளேர் என்று சுருதி. இந்த படம் அவருக்கு லக் ( அல்லது லெக் ).சைஸ் 4 ஆம். ஐயோ ! நடிக்க முயற்சித்தாலும் செயற்கைத்தனம் தெரியும் கண்கள். முகம் சிவக்க அழும் போதும் தாடையை இறுக்கி முறைக்கும் போதும் மட்டும் கொஞ்சம் அப்பா. கவர்ச்சி காட்டினாலும் பார்க்க ஒன்றும் இல்லை. கொஞ்ச செக்கன்கள் வந்தாலும் அபிநயாவின் பார்வையில் ஓராயிரம் கவிதைகள் எழுதலாம்.
படத்தின் நிஜ ஹீரோ ஜொனி ட்ரி நுயன். படம் முழுக்க அட்டகாசம் பண்ணும் சைனீஸ் வில்லன். கேர்லஸ் ஆக நடக்கும் அந்த நடை, ஹிப்னோடிச பார்வை, அதிரடி ஆக்க்ஷன். இடைவேளைக்கு பிறகு ஸ்ருதியை இவர் துரத்த ஆரம்பித்த பின்பு தான் படத்தில் விறுவிறுப்பு. வில்லன் ஸ்ருதியை தேடுவதும் வழியில் அகப்படுபவர்களிடம் இருந்து தகவல் கேட்டபின் அவர்களைக் கொல்லுவதும் டேர்மிநேட்டரை ஞாபகப்படுத்துகிறது. ( டெர்மிநேட்டர் 3 போலவே இங்கும் ஒரு கல்லறை சந்திப்பு! ) எந்திரன் 2 எடுத்தால் இவரை வில்லனாக போடலாம். டாடா சுமோ, அடியாட்கள் பட்டாளத்துக்கு நடுவில் நின்று கர்ச்சிக்கும் வழக்கமான தமிழ் சினிமா சோதா வில்லன்களுக்கு நடுவில் ஒத்தை ஆளாக நின்று குங் பூவில் பின்னி எடுக்கும் வில்லன். சூர்யாவுக்கு சிக்ஸ் பக் என்றால் இவருக்கு மல்டிபில் பக்ஸ். ( படத்தில் காட்டவில்லை!) என்ன, பெயரை ஒரு முறை சொல்லுவதற்குள் வைரஸ் காய்ச்சலே வந்து விடுகிறது.
அழுத்தமான ஒரு மனதைத் தொடும் கதையோ, சுவாரசியமான சம்பவங்களோ, மெல்லிய நகைச்சுவையோ எதுவுமே இல்லாத ஒரு டெலி பிலிம் மாதிரி இருக்கிறது படம். அஜித் ஒரு முறை பேட்டியில் சொல்லி இருந்தார். கதைகள் இதயத்தில் இருந்து வர வேணும், மண்டைக்குள் இருந்து வரக்கூடாது என்று. இது முருகதாஸ் மண்டைக்குள் போட்டு அறிவு ஜீவித்தனமாக சிந்தித்து, இடையே கொஞ்சம் தமிழ், ( உ.ம். ல, ள வித்தியாசம் இல்லாமல் டப்பிங் பேசி உயிரை வாங்கும் சுருதி) நாட்டுப்பற்று ( சீனாக்காரன் கெட்டவன் + கொஞ்சம் இலங்கை ) எல்லாம் போட்டு எடுத்த கதை. ' நான் மகான் அல்ல ' படத்தின் பல வசனங்களில் நகைச்சுவை உணர்ச்சியும் ஆழமும் இருந்தது. இத்தனைக்கும் அது ஒரு வன்முறை கலந்த படம். அது எதுவுமே இல்லாத வெகு சாதாரணமான வசனங்கள் இந்த படத்தில். ஒரு கேள்வி- எதுக்கு பிட்டு படம் மாதிரி எல்லா படத்திலையும் இலங்கை-தமிழ் என்று ஏதோ கொஞ்சம் சேர்க்க வேண்டும்? முடிந்தால் ஒரு முழு நீள படம் எடுக்க வேண்டியது தானே??( கன்னத்தில் முத்தமிட்டால் மாதிரி அல்ல- ஓரளவுக்கு காற்றுக்கென்ன வேலி மாதிரி)
மார்ஷல் ஆட்ஸ் சீகுவேன்சில் காற்றில் சருகுகள் சேர்ந்து ஒரு பந்தாக மாற்றி அதை வீசுவது போல காட்சியை ஸ்டார் மூவிஸில் போட்ட ஒரு பழைய ஜெட் லி படத்தில் பார்த்ததாக ஞாபகம். அதே போல கொலையான ஹீரோவை மம்மி மாதிரி பாண்டேஜ் போட்டு கட்டி வைப்பது, பண்டேஜ் அவிழ்ந்து அவர் நினைவு திரும்போது வீரனாக மாறியிருப்பது எல்லாம் குங் பூ ஹொஸ்டல் ( அதாங்க மிரட்டல் அடி )படத்தில் ஏற்கனவே பார்த்தாச்சே!
ஷங்கர் படமும் சமூகத்துக்கு மெசெஜ் சொல்லும் பான்டசி தான் என்றாலும், ரியாலிட்டி இற்கும் பான்டசி இற்கும் இடையான ஒரு சரிவிகித கலவை இருக்கும். அந்த விகிதம் சரியா இருக்கும். இது வரலாற்றுப் படமாவும் இல்லாம பான்டசியாவும் இல்லாம, ரியாலிட்டியாவும் இல்லாம கா. பூ. சமாசாரம் போல வெளிப்படையா தெரிவது தான் பெரிய பலவீனம். மல்டிபிள் பெர்சனாலிட்டி, கருட புராணத்தைக் கூட ஏற்றுக் கொள்ள முடிந்தவர்களால் ஏதோ சாரிக்கு பிளவுஸ் எடுப்பது போல டி.என்.ஏ. மட்ச்சிங் இருந்தால் மட்டும் திறமைகளும் அப்படியே இருக்கும் என்பது கொஞ்சம் இடிக்கும்.
' காதல் பொய்யம்மா' பாட்டில் வரும் கடத்தின் இசை மட்டும் ஏதோ செய்கிறது. யெலோ ஏலமா..தலை ஆட்டலாம். மற்றபடி 'என்னமோ ஏதோ' எல்லாம் செய்ய வைக்கும் பாட்டுகள் இல்லை.
முருகதாசுக்கு ஒரு சின்ன கேள்வி- ரமணா இந்தியனை கொஞ்சம் அங்க இங்க மாற்றி எடுத்தீங்கள், கஜினி-ஒப் கோர்ஸ், மொமெண்டோ படத்தின் தழுவல் ( உங்க பாஷையில் இன்ஸ்பிரேஷன்). ஏழாம் அறிவு- நிறைய படங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சம். உ.ம். ஷாலின் டெம்பிள் , குங் பூ ஹொஸ்டல்.எப்ப சொந்தமா ஒரு கதையை எடுக்க போறீங்க?
7 ஆம் அறிவு- 7 ஒ' க்ளாக் பிளேட்?
நீங்க ரொம்ப லேட் , அந்த மிர;ட்டல் அடி சமாச்சாரத்தை நான் முன்னமே பின்னூட்டங்களில் சொல்லிட்டேன், அதே போல ஜெட்லீ இலையை சுருட்டுற காட்சி, twin warriors படத்துல வருது.நான் இன்னும் பார்க்காதாதால சரியா எதுவும் சொல்லவில்லை, விமர்சனம் எல்லாம் பார்த்தா ஒரு படம் விடாம எல்லாப்படத்தையும் காபி அடிச்சு இருப்பாங்க போல.மாஸ் படத்துல நாகார்ஜுனா கூட புழுதி கிளப்புவார்!
வலைப்பூ பார்க்கவே நேரம் போதாம இருக்கு, இதில சத்தியமா நீங்க போட்ட பின்னூட்டங்களை படிக்கேல:-) லேட் ஆக விமர்சனம் எழுதினதுக்கு காரணம், லேட் ஆக படம் பார்த்தது. பை தி வே, படமே பார்க்காம அதை பற்றி சொல்ல முடிஞ்ச நீங்கள் ஒரு தீர்க்கதரிசி!
படத்தின் பெயர் twin warriors என்று ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி!