முதலில் கொஞ்சம் தேநீர்

எல்லோருக்கும் முதலில் ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்.இந்த வலைப்பூவின் இன் தலைப்புக்கும் இந்த ப்ளோக் இல் இடம் பெற போகும் விஷயங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ப்ளாக் இற்கு ஒரு பெயரை தேடி அலைந்து நான் பட்ட கஷ்ற்றம் எனக்கு தன தெரியும். வெகு ஜன பத்திரிகைகளில் சிறு பத்திரிகைகளில் வரும் கதைகள், கவிதைகளின் தலையங்கங்களை நக்கல் அடிப்பார்கள். பொதுவாக இப்போது பின் நவீனத்துவம் என்று சொல்லும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்குளுக்கு வைக்கும் பெயர்களின் அர்த்தங்கள் அவர்களுக்கே விளங்கியும் விளங்காமலும் தான் இருக்கும். முன்பு ஒரு முறை ஒரு வார இதழ் நக்கல் அடித்திருந்தது ஞாபகம் வருகிறது. உதாரணத்துக்கு, ' வண்ணத்துப் பூச்சியின் ஸ்டீல் வளையத்தில் ஒரு சாத்தான்'. ம்ம்ம்..எதாவது விளங்குகிறதா? இப்பிடித்தான்...பின்னிரவில் ஒரு நிலா நிழல்..அக்கினிக் குழம்பில் ஒரு பல்லி..இந்த ரகத்தில் தான் இருக்கும்..நான் தலைப்பு வைக்கும் பொது கூட பயந்தது இதை நினைத்து தான்..ஆனால் உலகத்தில் உள்ள எல்லா தலைப்புக்களையும் யாரோ வைத்து விட்டிருக்கிறார்கள்.asdfgh என்று டைப் பண்ணினால் மட்டும் தான் இந்த தலைப்பு உங்களுக்கு தயாராக உள்ளது என்று செய்தி வந்தது.அதனால் தான் இந்த சம்பந்தம் இல்லாத பெயர்...

எல்லோருக்கும் மனதில் சில எண்ணங்கள் இருக்கும்.ஒவ்வொரு விடயத்திலும் சில கருத்துக்கள் இருக்கும்.அனுஷ்காவா தமன்னாவா சிறந்த நடிகை என்பது போன்ற அதிகம் சிக்கல் இல்லாத விடயங்களில் இருந்து ஒசாமாவை சுட்டு கொன்றதில் அமெரிக்கா செய்தது மனிதாபிமான சட்டங்களை மீறும் செயலா இல்லையா போன்ற அதிகம் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்புக்கள் முதல் சத்ய சாய் பாபா கடவுளின் அவதாரமா இல்லையா போன்ற சில விமர்சனங்களுக்கு அப்பால் பட்டதாகக் கருதப்படும் விஷயங்கள் வரை ஒவ்வொரு மனங்களிலும் ஓடும் சிந்தனைகளுக்கு பஞ்சம் இல்லை.கருத்துக்களுக்கு என்றைக்குமே தட்டுப்பாடு கிடையாது.இந்த வலைப்பூவில் இனி வரும் காலங்களில் இடம் பெறப் போகின்றவை என்னுடைய பிரத்தியேகமான எண்ணங்கள்.சிலவற்றை பார்த்து சிரிப்பு வரலாம்.அழுகை வரலாம் ஏன் கோவம் கூட பலமாக வரலாம். அனைத்து எண்ணங்களையும் விமர்சனங்களையும் நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்பதல்ல இந்த வலை பூவின் நோக்கம்; ஆக குறைந்தது மாற்று கருத்துக்களையும் செவி மடுக்க உங்களை தயார் படுத்தி கொண்டாலே அது ஒரு சந்தோஷமான புரிதல் தான்.

சரி வரும் நாட்களில் சினிமா, அரசியல், மதம்,தத்துவம், வாழ்க்கை, காதல்,உறவுகள் பற்றி நிறைய பேசுவோம்...தொடர்ந்தும் பகிர்ந்து கொள்வோம்....


2 Responses
  1. மிகவும் அழகாக உங்கள் வலைப்பூ வாசலை திறந்து வைத்துள்ளீர்கள். குறைந்த சொற்களில் மிகவும் மேலான செய்தியை சொல்லி உள்ளீர்கள். சுதந்திர சிந்தனை அதாவது Thought Freedom திற்கு முதல் இடம் கொடுத்து உள்ளமை காலத்தின் தேவையாகும். கருத்துக்களுக்கு வேலி போடாமல் மேடை அமைத்தமைக்கு எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.


  2. ஆரம்பமே அழகு...வாழ்த்துக்கள்..


Related Posts Plugin for WordPress, Blogger...